/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குவாரியில் மிதந்த சிசு தாயிடம் விசாரணை
/
குவாரியில் மிதந்த சிசு தாயிடம் விசாரணை
ADDED : அக் 31, 2025 11:56 PM
பாலக்காடு: பாலக்காடு அருகே, குவாரியில் சிசுவின் சடலத்தை வீசிய தாயிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சொரனூர் கூனத்தறை அருகே உள்ள குவாரியில் நேற்று முன்தினம் மாலை ஒரு பையில் சிசுவின் சடலம் கிடப்பதை கண்ட தொழிலாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செறுதுருத்தி இன்ஸ்பெக்டர் வினு தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர்.
விசாரணையில், ஆற்றூர் பகவதிக்குன்னு என்ற பகுதியில் உள்ள சொப்னா, 37, என்பவருக்கு பிறந்த குழந்தை என்பதும், அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இன்ஸ்பெக்டர் வினு கூறியதாவது:
அதிக ரத்த போக்கு காரணமாக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சொப்னா அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், எட்டு மாத கர்ப்பிணியான அவர், கருகலைப்பு மாத்திரை சாப்பிட்டுள்ளார். வீட்டின் குளியலறையில் குழந்தை இறந்து பிறந்தது. அந்த சிசுவை பைக்குள் வைத்து, கணவனின் வீட்டில் இருந்து தாய் வீடான கூனத்தறை பகுதிக்கு சென்றுள்ளார்.
வீட்டின் அருகே உள்ள குவாரியில் பையுடன் சிசுவை வீசியுள்ளார். பெற்றோரிடம் எதையும் தெரிவிக்காமல் உடல் நிலை சரியில்லை என கூறியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு குழந்தைகளின் தாயான சொப்னா, பிரசவித்த சிசுவை ஏன் குவாரியில் வீசினார், அவருக்கு உதவியது யார் என்பது குறித்து விசாரிக்கிறோம்.
இவ்வாறு, கூறினார்.

