/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடுத்தடுத்து விழுந்த பாறைகளால் வாகன ஓட்டிகள்: அச்சம் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி

ADDED : அக் 22, 2025 11:37 PM

குன்னுார்: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து விழுந்த பாறைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவு நேரத்தில் மட்டும் வெளுத்து வாங்கி வந்த கன மழை நேற்று பகலில் பெய்தது. குன்னூர் கரன்சி அருகே ஆடர்லி சாலையில் மண்சரிவு ஏற்பட்டதுடன் பாறை உருண்டு சாலையோரத்தில் விழுந்தது. வருவாய்துறையினர் ஆய்வு செய்து பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டது.
வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளுக்கு வர வேண்டாம். என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் இங்குள்ள லேம்ஸ்ராக் காட்சி முனை தற்காலிகமாக மூடப்பட்டது. மழையுடன் பலத்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தொட்டபெட்டா காட்சி முனை, அவலாஞ்சி சூழல் சுற்றுலா உட்பட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டது.
அதேபோல், குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நந்த கோபால் பாலம் பகுதியில் ராட்சத பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ பகுதிக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் உதவியுடன் பாறையை அகற்றினர். சாலையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் இயக்க வேண்டும்.என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.