இடையூறான பாறை கற்களை அகற்றணும்: வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
இடையூறான பாறை கற்களை அகற்றணும்: வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
UPDATED : செப் 21, 2026 05:41 PM
ADDED : செப் 21, 2026 04:32 PM
மஞ்சூர்: போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் பாறை கற்களை அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மஞ்சூரிலிருந்து கெத்தை , முள்ளி , வெள்ளியங்காடு வழியாக கோவைக்கு அரசு பஸ்கள் , மின்வாரிய வாகனங்கள் , தனியார் வாகனங்கள் சென்று வருகிறது. கடந்தாண்டு பருவ மழையின் போது , பெரும்பள்ளம் - அத்திக்கடவு வரையிலான சாலையோரங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு கற்கள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளது.
நீண்ட நாட்களாகியும் இந்த பாறைகள் , கற்கள் அகற்றப்படாமல் உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். மிகவும் குறுகலாக உள்ள இந்த சாலையில் விழுந்து கிடக்கும் பாறை கற்கள் இடையூறால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வாகன ஓட்டிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயம் உள்ளதால் சாலையில் விழுந்து உள்ள பாறை கற்களை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
