தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி


UPDATED : செப் 27, 2026 05:45 PM

ADDED : செப் 27, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 05:45 PM ADDED : செப் 27, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலூர்:பந்தலூர் அருகே போத்துக்கொல்லி சாலையில், ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டுனர்கள் அவதி அடைந்துள்ளனர்.

பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் இருந்து போத்துக்கொல்லி செல்லும் சாலையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தனியார் தோட்ட வனத்திற்கு மத்தியில் அமைந்துள்ள சாலையில், கிராம மக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் வனத்துறை வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

இந்நிலையில், சாலையில் உள்ள பாலத்தின் அருகே, திடீரென பள்ளம் உருவாகி உள்ளது.

இந்த வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள் பள்ளம் ஏற்பட்டுள்ளது குறித்து தெரியாத நிலையில், வேகமாக சென்று விபத்தில் சிக்கும் நிலை தொடர்கிறது. இரவு நேரங்களில் இந்த பகுதியில் யானைகள் தொல்லை அதிகரிக்கும் சூழலில், வனத்துறை வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, சாலை ஓரத்தில் ஏற்பட்டுள்ள குழியை, மூடுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us