/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகன திருத்த சட்டத்தை கண்டித்து ஓட்டுனர் கூட்டமைப்பினர் முற்றுகை
/
வாகன திருத்த சட்டத்தை கண்டித்து ஓட்டுனர் கூட்டமைப்பினர் முற்றுகை
வாகன திருத்த சட்டத்தை கண்டித்து ஓட்டுனர் கூட்டமைப்பினர் முற்றுகை
வாகன திருத்த சட்டத்தை கண்டித்து ஓட்டுனர் கூட்டமைப்பினர் முற்றுகை
ADDED : பிப் 06, 2024 10:00 PM

ஊட்டி;மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கண்டித்து, நீலகிரி அனைத்து ஓட்டுனர்கள் கூட்டமைப்பினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு சமீபத்தில் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, 'கவன குறைவாக அல்லது விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்றால், டிரைவர்களுக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 7 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,' என, விதி உள்ளது.
இதனால், ஓட்டுனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற கோரி,
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல், நீலகிரியில் கடந்த மாதம் டிரைவர்கள் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட அனைத்து ஓட்டுனர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு., சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கு ஓட்டுனர்கள் சங்க தலைவர் ரமேஷ் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். தொடர்ந்து, 'மோட்டார் தொழிலாளர் விரோத சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்; அதிகபட்ச தண்டனைகள், ஆன்லைன் அபராதம், வாகன வரி உயர்வு போன்றவற்றை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜனை சந்தித்து போராட்டக் குழுவினர் மனு அளித்தனர்.

