UPDATED : மே 24, 2026 09:18 PM
ADDED : மே 24, 2026 08:52 PM
குன்னூர்:குன்னூர் காட்டேரி பூங்காவில், தோட்டக்கலை துறை சார்பில், 22ம் தேதி மலை பயிர்கள் கண்காட்சி துவங்கியது. இதில் நுங்கு, இளநீர், பாக்கு உள்ளிட்டவற்றில் படகில் மீனவ பெண், தேங்காய் துருவல்களில் சங்கு, கொக்கோ, காபி, டீத்தூள் ஆகியவற்றில் நங்கூரம் துடுப்பு, தமிழகம் வரைபடம், கடற்கரை கலங்கரை விளக்கம், நுழைவு வாயில்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அரங்குகளில் மலை பயிர்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பரத நாட்டியம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்டால்கள் வைத்தவர்கள், கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பணியாற்றியவர்களுக்கு நேற்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் -- பரிசுகள் வழங்கினார்.
போலீசார் அலட்சியம்
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையை சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இந்த சாலை வழியாக பெரும்பாலான சுற்றுலா பயணிகள் காட்டேரி பூங்காவிற்கு செல்ல முடியவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம், போலீசாரிடம் தெரிவித்தும் முழு தீர்வு கிடைக்கவில்லை. சாலை விரிவாக்கம் செய்த நிலையில், போலீசார் வாகனங்களை தடுக்கும் லெவல் கிராசிங், பிளாக் பிரிட்ஜ் பகுதிகளில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வரும் ஆண்டுகளில் இது போன்ற பாதிப்பு இல்லாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
