ADDED : செப் 17, 2026 05:33 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி தனியார் தேயிலை தோட்டத்தில், மலைப்பாம்பு வளர்ப்பு நாயை விழுங்க முயன்றது.
பந்தலுார் அருகே சேரம்பாடி தனியார் தேயிலை தோட்டத்திற்கு உட்பட்ட, சோலாடி தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில், நேற்று மதியம் மலைப்பாம்பு ஒன்று வந்து, வீட்டின் அருகே படுத்திருந்த நாயை சுருட்டி விழுங்க முயன்றது.
இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சேரம்பாடி வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, மலைப்பாம்பிடம் இருந்து வளர்ப்பு நாயை மீட்டு, அதனை அருகில் உள்ள அடர்த்தியான வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
இந்த பகுதியில் சிறு குழந்தைகள் விளையாடுவது மற்றும் மாணவர்கள் தோட்டம் வழியாக பள்ளிக்கு செல்லும் நிலையில், இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
