/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டத்தில் மலை பாம்பு; மீட்டு வனத்தில் விடுவிப்பு
/
தோட்டத்தில் மலை பாம்பு; மீட்டு வனத்தில் விடுவிப்பு
தோட்டத்தில் மலை பாம்பு; மீட்டு வனத்தில் விடுவிப்பு
தோட்டத்தில் மலை பாம்பு; மீட்டு வனத்தில் விடுவிப்பு
ADDED : டிச 29, 2024 11:26 PM

பந்தலுார்; பந்தலுாரில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று மதியம், மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக தேவாலா வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
வனச்சரகர் சஞ்சீவி, வனவர்கள் சுரேஷ்குமார், பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று, தேயிலை தோட்டத்தில் காணப்பட்ட மலைப்பாம்பை மீட்டனர். மீட்கப்பட்ட மலைபாம்பு அங்கிருந்து எடுத்துச் சென்று வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
வனச்சரகர் சஞ்சீவி கூறுகையில், 'மழை காலம் முடிந்து தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், பாம்பு போன்ற ஊர்வன விலங்குகள் குளிர்ச்சியான இடங்களை நாடி வரும்.
இவற்றை பார்த்தால் பொதுமக்கள் தொந்தரவு செய்யாமல், வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அதனை மீட்க ஒத்துழைக்க வேண்டும்,' என்றார்.