/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தில் மலை பாம்பு மீட்பு
/
தேயிலை தோட்டத்தில் மலை பாம்பு மீட்பு
ADDED : செப் 22, 2025 10:07 PM
கூடலுார்:
கூடலுார் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டத்தில் இருந்த, 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வன ஊழியர்கள் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனத்தில் விடுவித்தனர். கூடலுார் பாண்டியார் டான்டீ, சரகம் பகுதியில் நேற்று மதியம் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட, தொழிலாளர்கள் தேயிலை செடிகளுக்கு இடையே மலைப்பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நாடுகாணி வனச்சரகர் ரவி உத்தரவுப்படி, வன காவலர் கலை கோவில் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று, தேயிலை செடிகளுக்கு இடையே இருந்த, 12 அடி மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அதனை, தமிழக - கேரளா எல்லை அருகே உள்ள அடர்ந்த வனத்தில் விடுவித்தனர்.