தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மலை ரயில் பயணம்: மாணவர்களுக்கு 'அட்வைஸ்'

மலை ரயில் பயணம்: மாணவர்களுக்கு 'அட்வைஸ்'

மலை ரயில் பயணம்: மாணவர்களுக்கு 'அட்வைஸ்'


UPDATED : அக் 16, 2026 04:38 PM

ADDED : அக் 16, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 04:38 PM ADDED : அக் 16, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல் துறை சார்பில், பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

குன்னுார் ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் தலைமை வகித்து பேசுகையில்,‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகுந்த நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பயன்பாடற்ற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஓடும் ரயில்களில் படிக்கட்டுகளில் நின்றும், ஜன்னல்களில் தலையை வெளியில் நீட்டி, ஆபத்தான முறையில் செல்பி எடுக்க கூடாது.

ரயில் நிலைய வளாகத்திலோ அல்லது பெட்டிகளிலோ கேட்பாரற்றுக் கிடக்கும் மர்ம பொருட்களை தொடாமல் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பயணத்தின் போது முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து எவ்வித உணவுகளை வாங்கி உட்கொள்ள கூடாது. ரயில்களில் பிக்பாக்கெட், பயணிகளின் உடைமைகள் திருட்டு மற்றும் நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து ரயில்வேயின், 139 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்,’’ என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள், போதைபொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சென்னை பாபாஜி வித்யாஷ்ரம் பள்ளியிலிருந்து கல்வி சுற்றுலா வந்த, 43 மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us