/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட மலை ரயில் மீண்டும் இயக்கம்
/
இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட மலை ரயில் மீண்டும் இயக்கம்
இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட மலை ரயில் மீண்டும் இயக்கம்
இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட மலை ரயில் மீண்டும் இயக்கம்
ADDED : டிச 05, 2024 07:12 AM

குன்னுார்; புயல் மற்றும் கனமழை காரணமாக, இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட மலை ரயில் இயக்கம் நேற்று துவங்கியது.
வங்க கடலில் ஏற்பட்ட 'பெஞ்சல்' புயல் காரணமாக, தமிழகத்தில் கனமழை நீடித்தது. நீலகிரி மாவட்டத்தில், இரவில் கனமழை கொட்டி தீர்த்த போதும், பகலில் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை காலநிலை நிலவுகிறது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட நீலகிரி மலை ரயில்கள் அனைத்தும், நேற்று முதல் வழக்கம் போல இயங்க துவங்கின.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு, ஊட்டிக்கு சென்றது.
இதே போல காலை, 7:45 மணிக்கு குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு உள்ளூர் ரயில் புறப்பட்டு சென்றது. மலை ரயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.