தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இயற்கை உரம் பயன்படுத்தி மலை காய்கறி சாகுபடி

 இயற்கை உரம் பயன்படுத்தி மலை காய்கறி சாகுபடி

 இயற்கை உரம் பயன்படுத்தி மலை காய்கறி சாகுபடி


ADDED : மார் 31, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் இயற்கை உரம் பயன்படுத்தி, மலை காய்கறி சாகுபடி செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோத்தகிரி பகுதியில் நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், கணிசமான ஏக்கர் பரப்பளவில், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளை கிழங்கு மற்றும் பூண்டு உள்ளிட்ட மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த காலங்களில், வேதி உரங்களை பயன்படுத்தி வந்த, விவசாயிகள் தற்போது, இயற்கை விவசாயத்திற்கு படிப்படியாக மாறி வருகின்றனர். இதனால், மண்ணின் வளம் பாதுகாக்கப்படுவதுடன், விளைச்சல் அதிகரித்து, கட்டுப்படியான விலையும் கிடைக்கிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகத்துடன் தோட்டக்கலைத்துறை இயற்கை விவசாயத்திற்கு தேவையான ஆலோசனை வழங்கி, அங்கக வேளாண்மை திட்டத்தின் கீழ், இயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து வழங்கி வருகிறது.

அதன்படி, கூடுமானவரை விவசாயிகள் இயற்கை உரம் பயன்படுத்தி, பயிர் சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us