/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
என்.சி.சி., மாணவர்களுக்கு மலையேறும் பயிற்சி
/
என்.சி.சி., மாணவர்களுக்கு மலையேறும் பயிற்சி
ADDED : ஜன 02, 2025 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார், ; குன்னுார் வெலிங்டன் பகுதியில் உள்ள தங்கராஜ் நினைவு மைதானத்தில், என்.சி.சி., மாணவ, மாணவியருக்கான சாகச பயிற்சி நடந்தது.
அதில், கேரளா, லட்சத்தீவு, தமிழகம் புதுவை, அந்தமான் நிக்கோபார், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா கோவா, உட்பட, 6இயக்குநகரங்களை சேர்ந்த, 100 என்.சி.சி., மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
'திறமை, தைரியம், துணிச்சல், ஒருங்கிணைப்பு,' உள்ளிட்டவைகளை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட மலை ஏறுதல் பயிற்சியில், ஊட்டி-31 தமிழ்நாடுஎன்.சி.சி., கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்தோஷ்குமார் தலைமையிலான குழுவினர் பயிற்சி அளித்து, சான்றிதழ்களை வழங்கினர்.

