தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியில் இதுவரை 4,000 பட்டாக்கள் எம்.பி., ராஜா தகவல்

 நீலகிரியில் இதுவரை 4,000 பட்டாக்கள் எம்.பி., ராஜா தகவல்

 நீலகிரியில் இதுவரை 4,000 பட்டாக்கள் எம்.பி., ராஜா தகவல்


ADDED : ஜன 13, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் விலையில்லா இணைய வழி வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், நீலகிரி தொகுதி எம். பி., ராஜா, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் பங்கேற்று, ஊட்டி மற்றும் குந்தா வட்டத்தில், 1,100 பயனாளிகளுக்கு விலையில்லா இணைய வழி வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் எம்.பி., ராஜா பேசுகையில்,''மாநில அரசு மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பட்டா வழங்குவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், இதுவரை மாவட்டத்தில், 4,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. தவிர, கூடலுார் கோத்தகிரி பகுதிகளில், 3,000 பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,''என்றார்

கலெக்டர் லட்சுமி பவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், எம்.எல்.ஏ., கணேஷ், நகராட்சி தலைவி வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us