/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு திட்டங்களுக்கு மக்களின் ஈடுபாடு அவசியம் எம்.ஆர்.சி., கமாண்டன்ட் அழைப்பு
/
அரசு திட்டங்களுக்கு மக்களின் ஈடுபாடு அவசியம் எம்.ஆர்.சி., கமாண்டன்ட் அழைப்பு
அரசு திட்டங்களுக்கு மக்களின் ஈடுபாடு அவசியம் எம்.ஆர்.சி., கமாண்டன்ட் அழைப்பு
அரசு திட்டங்களுக்கு மக்களின் ஈடுபாடு அவசியம் எம்.ஆர்.சி., கமாண்டன்ட் அழைப்பு
ADDED : பிப் 10, 2026 04:53 AM

குன்னுார்: ''அரசு நிதியை ஒதுக்கீடு செய்தாலும், மக்களின் சமுதாய ஈடுபாடு இருக்கும் போது மட்டுமே கட்டுமான பணிகள் சிறப்பாக அமையும்,'' என, கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணனேந்து தாஸ் பேசினார்.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் மஞ்சுதளா கிராமத்தில், குன்னுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 25 லட்சம் ரூபாய் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு, 15 லட்சம் என மொத்தம் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பல்நோக்கு சமுதாய கூடம் கட்டப்பட்டது. நேற்று நடந்த விழாவில், அரசு கொறடா ராமச்சந்திரன் சமுதாய கூடத்தை திறந்து வைத்து பேசுகையில்,''தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவத்துறை நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. முதியோருக்கு வீட்டுக்கே வந்த ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், மகளிருக்கான இலவச பஸ் பயணம் போன்ற உன்னதமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றும், முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும்,'' என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணனேந்து தாஸ் பேசுகையில், ''வெலிங்டன் கன்டோன்மென்டில் உள்ள ஒரே படுக கிராமமான இங்கு, மக்களின், பல்வேறு சடங்குகள் மற்றும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பயனுள்ளதாக அமையும். கட்டடத்தின் கட்டுமான தரம், மிக உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளது.
அரசு நிதியை ஒதுக்கீடு செய்தாலும், மக்கள் மற்றும் சமுதாயத்தின் ஈடுபாடு இருக்கும் போது மட்டுமே கட்டுமான பணிகள் சிறப்பாக அமையும்.
அரசு மக்களும் இணையும்போது சிறந்த திட்டங்கள் உருவாகும். இதற்கு இந்த கட்டடமே சான்று,'' என்றார்.
வாரிய முதன்மை செயல் அலுவலர் வினோத் விக்னேஸ்வரன் பேசுகையில், ''படுக சமுதாய மக்கள் பாரம்பரிய வெள்ளை ஆடையை போன்றே அவர்களின் மனங்களும் வெள்ளையாகவே இருக்கிறது. இந்த கூடம் மக்கள் சமுதாய நல்லிணக்கத்திற்கு துணையாக இருக்கும்,'' என்றார்.
வாரிய நியமன உறுப்பினர் ஷீபா, மஞ்சுதளா ஊர் தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, ஊர் தலைவர் சண்முகம், முன்னாள் கன்டோன்மென்ட் துணை தலைவர் வினோத் குமார் உட்பட வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், கிராம மக்கள் செய்தனர்.

