/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகா விஷ்ணு கோவிலில் மிருத்யுஞ்சய ேஹாமம்
/
மகா விஷ்ணு கோவிலில் மிருத்யுஞ்சய ேஹாமம்
ADDED : ஆக 10, 2025 09:26 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பொன்னானியில் ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலில் மஹா மிருத்யுஞ்சய ஹோமம் நடத்தப்பட்டது.
விஷ்ணு கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி நன்மைக்காக கடந்த மாதம், தாம்பூல பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில், ஊர் நன்மைக்காகவும், பக்தர்களின் உடல் நலத்திற்காகவும் மகா மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று அதிகாலை சிறப்பு கணபதி ஹோமமும், அதனை தொடர்ந்து, 9:00- மணி முதல் பகல் ஒரு மணி வரை மகா மிருத்யுஞ்சய ஹோமம், நாராயணன் நம்பூதிரிபாடு, தணேஷ் நம்பூதிரி, கோவில் மேல் சாந்தி சுதீஷ் தலைமையில் நடந்தது. முன்னதாக மகளிர் அமைப்பு சார்பில் சிவபுராணம் பாடப்பட்டது.
அதனை தொ டர்ந்து கோவில் வளாகம் சுற்றிலும் நாராயண கவசம் பாடியதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் நெய் வழங்கப்பட்டதுடன், குறைந்தது, 7 நாட்கள் கோவில் வளாகத்தை சுற்றிய பக்தர்கள் விரதம் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
ஏற்பாடுகளை மேலாளர் சந்தியா, கமிட்டி தர்மகர்த்தா பிரபாகரன், நிர்வாகிகள் புஷ்கரன், வினோத், உன்னிகிருஷ்ணன் மற்றும் மகளிர் அமைப்பினர் செய்திருந்தனர்.