/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி அணைகளில் சகதி: 10 பிரிவு மின் உற்பத்தி நிறுத்தம்
/
நீலகிரி அணைகளில் சகதி: 10 பிரிவு மின் உற்பத்தி நிறுத்தம்
நீலகிரி அணைகளில் சகதி: 10 பிரிவு மின் உற்பத்தி நிறுத்தம்
நீலகிரி அணைகளில் சகதி: 10 பிரிவு மின் உற்பத்தி நிறுத்தம்
ADDED : ஆக 25, 2025 11:32 PM
ஊட்டி:
நீலகிரி அணைகளில் சகதி அதிகரிப்பால் மின் நிலையங்களில் உள்ள, 10 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையங்கள் உள்ளன. 13 அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாயிலாக மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
மின் நிலையங்களில் உள்ள, 32 பிரிவுகளின் வாயிலாக, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால்,அணைகளில், 90 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது.
அணைகளில் சேறு அதிகரிப்பு அதில், அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா, கெத்தை உள்ளிட்ட அணைகளில் கடந்த பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளது.
பருவ மழையின் போது காய்கறி, தேயிலை தோட்டத்திலிருந்து அடித்து வரப்படும் மண் அணைகளில் சேகரமானதால் பாதி அளவுக்கு சகதி நிறைந்துள்ளது.
இதனால், அணைகளில் இருந்து தண்ணீர் செல்லும் போது, மின் உற்பத்திக்கான ராட்சத குழாய் நுழைவு பகுதிகளில் சேறும், சகதியும் தேங்கியதால், தண்ணீரை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், காட்டு குப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லுார் உள்ளிட்ட மின் நிலையங்களில், 10 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 220 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'அணைகளில் தேங்கியுள்ள சகதியின் நிலை, துார் வார வேண்டிய அவசியம் குறித்து, மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்த பின், தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்,' என்றனர்.