/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேற்று கால்பந்து விளையாட்டு; அசத்திய மாணவ, மாணவிகள்
/
சேற்று கால்பந்து விளையாட்டு; அசத்திய மாணவ, மாணவிகள்
சேற்று கால்பந்து விளையாட்டு; அசத்திய மாணவ, மாணவிகள்
சேற்று கால்பந்து விளையாட்டு; அசத்திய மாணவ, மாணவிகள்
ADDED : ஜூலை 18, 2025 09:13 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு, அய்யன்கொல்லி, தாளூர், பிதர்காடு, அமாபலமூலா பகுதி இளையோர் மத்தியில் கால்பந்து போட்டி அதிக வரவேற்பு பெற்று உள்ளது.
இந்நிலையில், மழைகாலத்தை வரவேற்கும் விதமாக, தாளூர் கல்லுாரியில் வயல் வெளியில் சேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில், மாணவ-,மாணவிகள் மழையில் நனைந்தவாறு, தங்கள் திறனை வெளிக்காட்டினர்.
11 பிரிவுகளில் நடந்த போட்டியில், மாணவர்களுக்கான கால்பந்து இறுதி போட்டியில் பி.ஏ., ஆங்கில பிரிவு முதல் இடம்; பி.காம்., சி.ஏ., 2-ம் இடத்தையும் பிடித்தன.
மாணவிகளுக்கான ஹேண்ட் பால் போட்டியில், முதல் இடத்தை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரவு; 2- இடத்தை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவும் பெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ஷெரில் வர்கீஸ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். கல்லுாரி செயலாளர் ராஷித்கஷாலி கூறுகையில், ''கல்லூரியில் பாடங்கள் மட்டும் இன்றி, மாணவர்களின் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், மழை காலத்தை வரவேற்கவும், உடல் திறனை மேலும் மேம்படுத்தும் வகையிலும் சேற்று கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதில், மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகின்றனர்,'' என்றார். வெற்றி பெற்ற அணிகளுக்கு, நெல் நாற்று நடவு செய்யும் தினத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன.