/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை வளர்ப்பு யானைக்கு காலில் காயம்: பாகனிடம் வனத்துறை விசாரணை
/
முதுமலை வளர்ப்பு யானைக்கு காலில் காயம்: பாகனிடம் வனத்துறை விசாரணை
முதுமலை வளர்ப்பு யானைக்கு காலில் காயம்: பாகனிடம் வனத்துறை விசாரணை
முதுமலை வளர்ப்பு யானைக்கு காலில் காயம்: பாகனிடம் வனத்துறை விசாரணை
ADDED : ஆக 03, 2025 08:27 PM
கூடலுார்; முதுமலையில், வளர்ப்பு யானை சுமங்கலா, மற்றொரு வளர்ப்பு யானையை தாக்கிய போது, பாகன்கள் தடுத்த நிலையில், அதன் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. அங்கு மூன்று குட்டிகள் உட்பட, 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன.
இவைகளுக்கு, நாள்தோறும் காலை, மாலை வனத்துறை சார்பில் சோறு, ராகி,கொள்ளு உள்ளிட்ட சமைத்த உணவுகள் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.
இந்நிலையில், அபயாரண்யம் முகாமில் உள்ள வளர்ப்பு சுமங்கலா, நேற்று அதிகாலை முகாமை ஒட்டிய பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளது. அப்போது, திடீரென முகாமில் உள்ள, வளர்ப்பு யானை 'சேரம்பாடி சங்கரை' தாக்கி உள்ளது. இதனை அறிந்த பாகன்கள், யானைகள் மோதலை தடுத்து யானைகளை, சமாதானப்படுத்தி கட்டினர்.
அதில், சுமங்கலா யானையின் பின் கால்களில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. வனச்சரகர் மேகலா விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், சுமங்கலா யானைக்கு சிகிச்சை அளித்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'வளர்ப்பு யானை சுமங்கலா இன்று (நேற்று), அதிகாலை திடீரென சேரம்பாடி சங்கர் யானையை தாக்கியது. யானை பாகனகள் அதனை தடுத்துள்ளனர். அப்போது, காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. யானை நல்ல நிலையில் உள்ளது.
காயம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.