/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
/
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
ADDED : மே 19, 2025 08:44 PM
கோத்தகிரி; கோத்தகிரி கன்னிகா தேவி காலனியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறக்கப்பட்டது.
கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, கன்னிகா தேவி காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், திருவிழா உட்பட சுப முகூர்த்தங்கள் மற்றும் இறுதி சடங்குகள் நடத்துவதில் பல்நோக்கு கட்டடம் இல்லாததால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தனர்.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து, குன்னுார் எம்.எல்.ஏ., மற்றும் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தார். கிராமத்தில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டது. பணிகள் முழுமை பெற்ற நிலையில், அரசு கொறடா ராமச்சந்திரன், மக்கள் பயன்பாட்டிற்காக, பல்நோக்கு கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் இளம்பரிதி, கிராம தலைவர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.