/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு; நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
/
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு; நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு; நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு; நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 27, 2025 09:16 PM
ஊட்டி; ஊட்டி நகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி நகராட்சியில் சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் வினோத், துணைத் தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பல கவுன்சிலர்கள் பேசுகையில், 'நகராட்சியின் பல பகுதிகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. தெருவிளக்குகள் எரியாததால் இரவில் நகர் பகுதியில் உலாவும் நாய், சிறுத்தை, கரடியால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வளர்ச்சி பணிகள் குறித்து மன்ற கூட்டத்தில் தெரிவித்தாலும், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குண்டும், குழியுமான சாலை மழையால் சேறும்,சகதி அதிகரித்து பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டதால் சரிவர குடிநீர் கிடைப்பதில்லை.
வார்டுகள் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தெரிவித்தாலும் முறையாக ஆய்வு மேற்கொள்வதில்லை இதனால், வார்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கவுன்சிலர்கள் பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாதது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது,' என்றனர்.
கமிஷனர் வினோத் பேசுகையில்,''ஒவ்வொரு வார்டு வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்,'' என்றார்
இதற்கிடையே, நகராட்சி பொறியாளர் சேகர் மீது, பெரும்பாலான கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியதால், திடீரென மன்ற கூட்டத்திலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.