ADDED : பிப் 13, 2026 05:34 AM

அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி பழைய கலெக்டர் அலுவலகம் அருகில், புதுமந்து செல்லும் சாலையில் பழமை வாய்ந்த கவ்டால் முனீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை, 5:00 மணிக்கு முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 7:00 மணிக்கு ஆராதனை நடைபெற்றது.
மதியம் 12:00 மணிக்கு உச்சி பூஜை நடைபெற்றது. அப்போது மலர் அலங்காரத்தில் முனீஸ்வரர் அருள் பாலித்தார். மேலும் கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
