/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகளை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகள்; வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

ADDED : ஜூன் 11, 2025 08:42 PM

குன்னுார்; குன்னுாரில் தடுப்பு சுவர் அமைக்க, கடைகளை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் கடைக்காரர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
குன்னுார் நகராட்சி, 14வது வார்டு ஓட்டுபட்டறையில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் சாலையோர நகராட்சி இடத் தில், 3 கடைகள் உள்ளன.
இங்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைப்பதற்காக, கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் வந்தனர். வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
'நகராட்சியின் இடம் என்பதால், தடுப்புச் சுவர் அமைக்க, போலீசார் பாதுகாப்புடன் கடைகள் விரைவில் அகற்றப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்து சென்றனர்.
கடைக்காரர்கள் கூறுகை யில், 'முறையாக நகராட்சிக்கு வரி செலுத்தி வரும் நிலையில், உரிய முறையில் நோட்டீஸ் வழங்கி அகற்ற வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு உள்ளது. அதிகாரிகள் நோட்டீஸ் வழங்காமல் திடீரென நடவடிக்கை எடுக்கின்றனர்,' என்றனர்.