/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ள நகராட்சி வாகனங்கள்; காட்டு செடிகள் சூழந்து வீணாகும் அவலம்
/
பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ள நகராட்சி வாகனங்கள்; காட்டு செடிகள் சூழந்து வீணாகும் அவலம்
பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ள நகராட்சி வாகனங்கள்; காட்டு செடிகள் சூழந்து வீணாகும் அவலம்
பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ள நகராட்சி வாகனங்கள்; காட்டு செடிகள் சூழந்து வீணாகும் அவலம்
ADDED : டிச 23, 2024 10:28 PM

குன்னுார்; குன்னுார் உழவர் சந்தை அருகே காட்டு செடிகள் சூழ்ந்த நிலையில், நிறுத்தப்பட்டுள்ள நகராட்சிக்கு சொந்தமான லாரிகள் வீணாகி வருகின்றன.
குன்னுார் நகராட்சியில் குப்பை, குடிநீர் கொண்டு செல்ல பல லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், பழுதான வாகனங்கள் பெரும்பாலும் பராமரிக்காமல் விடப்பட்டு, தற்போது உழவர் சந்தை அருகே உள்ள சதுப்பு நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இவற்றை பயன்படுத்த முடியாமல் இருந்தால், அவற்றை ஏலம் விடாமல் இருப்பதால், துருபிடித்து, காட்டு செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. தற்போது, அப்பகுதி விஷ ஜந்துக்கள் வசிபிடமாக மாறி வருகிறது.
அதில், 'கொரோனா' காலத்தில், 15 லட்சம் ரூபாய் செலவில் கொண்டுவரப்பட்ட டிராக்டர், பயனில்லாமல் குப்பை போல கிடக்கிறது. புதிதாக வந்த குடிநீர் லாரியும் பயனின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
சதுப்புநிலமான இந்த இடத்தில், தற்போது மார்க்கெட் கடை வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்போது, இந்த வாகனங்கள் எந்த இடத்திற்கு மாற்றப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், தற்போது இயங்கி வரும் வாகனங்களில் சிலவற்றுக்கு வட்டார போக்குவரத்து அலுவலக தகுதி சான்று பெறாமல் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றை நல்ல முறையில் பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அவ்வப்போது இவற்றை தள்ளி சென்று இயக்க வேண்டிய கட்டாயம் ஊழியர்களுக்கு ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாயில், புதிதாக ஆரம்ப சுகாதார மையம் இங்கு, கட்டப்பட்ட நிலையில், திறக்கப்படாமல் புதர்கள் சூழ்ந்து மக்களின் வரிபணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பகுதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.