/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பணிகள் முடிந்தும் பணம் தராத நகராட்சி; வாயில் கருப்பு துணி கட்டி ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
/
பணிகள் முடிந்தும் பணம் தராத நகராட்சி; வாயில் கருப்பு துணி கட்டி ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
பணிகள் முடிந்தும் பணம் தராத நகராட்சி; வாயில் கருப்பு துணி கட்டி ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
பணிகள் முடிந்தும் பணம் தராத நகராட்சி; வாயில் கருப்பு துணி கட்டி ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
ADDED : டிச 24, 2025 06:23 AM

பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்த பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும், பணம் தராததால் ஒப் பந்ததாரர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 75 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜன., மாதம், நகராட்சி மூலம், 51 பணிகள் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை டெண்டர்எடுத்த ஒப்பந்ததாரர்கள்,மார்ச் மாதம் பணிகளை நிறைவு செய்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர், ஒப்பந்ததாரர்களின் பட்டியல் தொகை வழங்காததுடன், ஒப்பந்த தொகையும் வழங்காமல், நகராட்சி நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது. இது குறித்து, நீலகிரி நெல்லியாளம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில், நேரிலும், கடிதம் மூலமும் நகராட்சி கமிஷனருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், தீர்வு காணப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள், சங்கத்தின் தலைவர் ஷாஜி தலைமையில், நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார், நகராட்சி கமிஷனர் சக்திவேல் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது, கமிஷனர் கூறுகையில்,''மாநில அரசு இதுவரை நிதியை விடுவிக்கவில்லை. டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கான நிதி வந்ததும், பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தொகை வழங்கப்படும்,'' என்றார். ஒரு வாரம் கால அவகாசம் அளித்த ஒப்பந்ததாரர்கள், போராட்டத்தை கைவிட்டனர். போராட்டத்தில் செயலாளர் நசுருதீன், பொருளாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

