காளான் சாகுபடி தொழில் நுட்பம் :விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
காளான் சாகுபடி தொழில் நுட்பம் :விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
ADDED : ஏப் 09, 2026 07:47 PM

கோத்தகிரி: கோத்தகிரி குருகுத்தி கிராமத்தில், தோட்டக்கலை மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு காளான் சாகுபடி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பரத்குமார் வழிகாட்டுதல்படி நடந்து நிகழ்ச்சியில், 'அட்மா' திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், மொட்டு காளான் சாகுபடி முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
உதவி தொழில் நுட்ப மேலாளர் அறிவுச்செல்வன், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகள் வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
உதவி தொழில் நுட்ப மேலாளர் சற்குணசீலன், காளான் மதிப்பு கூட்டுதல் முறை குறித்தும், அதன் மூலம் கிடைக்கும் லாபம் குறித்தும் விளக்கம் அளித்தார். ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். விவசாயிகளுக்கு, காளான் சாகுபடிக்கான தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டது.
