ADDED : மார் 27, 2026 04:43 PM

அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுாரில் ரங்கோலி கோலமிட்டு தேர்தலில் வாக்களிப்பது முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கூடலுார் சட்டசபை தொகுதியில், 'எனது வாக்கு; எனது உரிமை' என்ற தலைப்பில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து தேர்தல் அதிகாரிகள், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, கூடலுார் தாலுகா அலுவலகத்தில், 'எனது வாக்கு; எனது உரிமை' என்ற தலைப்பில் நேற்று கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், தாசில்தார் சங்கர் கணேஷ், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் சரவணன் உள்ளிட்டோர் கோலத்தை பார்வையிட்டனர்.
