/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் போதை போலீஸ் 'சஸ்பெண்ட்'
/
ஊட்டியில் போதை போலீஸ் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 31, 2024 10:14 PM

ஊட்டி : ஊட்டியில் போதையில் இரு சக்கர வாகனத்தை இயக்கி, இளைஞர் மீது மோதிய போலீஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஊட்டி பி---1 போலீஸ் ஸ்டேஷனில் ராஜ்குமார், 30, போலீசாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார்.
சீருடையில் பணியில் இருக்கும்போதே மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில், ஊட்டி கமர்சியல் சாலையில் இருந்து மணிகூண்டு பகுதியை நோக்கி சென்றார்.
வாகனம் அவரது கட்டுப்பாட்டை தாண்டி மார்க்கெட் அருகே வந்தபோது, நடந்து சென்று கொண்டிருந்த, அகில் என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், அவர் காயம் அடைந்தார். போலீசை பொதுமக்கள் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, போலீஸ் மது போதையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ., சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜ்குமாரை மீட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று, ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், போலீஸ் ராஜ்குமார் போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.