/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி
/
தேசிய ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 13, 2025 09:29 PM

ஊட்டி; ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாநில ரத்த பரிமாற்ற குழுமம் ஆகியவை சார்பில், தேசிய ரத்த கொடையாளர் தினம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா, பேரணியை துவக்கி வைத்தார்.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் துவங்கிய பேரணி, நகரின் முக்கியசாலைகள் வழியாக, சேட்மருத்துவமனையை அடைந் தது. பேரணியின் போது, 'ரத்தம் வழங்குவதன் அவசியம், உயிரிழப்பை தடுக்க கொடையாளர்களின் அர்ப்பணிப்பு,' ஆகியவை குறித்து, பதாகைகள் ஏந்தி, மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர்கீதாஞ்சலி, துணை முதல்வர் ஜெயலலிதா, குடிமை மருத்துவ அலுவலர் ரவிசங்கர், நோயியல் துறை தலைவர் கலைவாணி, ரத்தவங்கி மருத்துவர்கள் புவனேஸ்வரி, ராகவேந்திரன், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.