தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்பு பணி

 தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்பு பணி

 தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்பு பணி


ADDED : ஜன 24, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார்- ஊட்டி மைசூரு தேசிய நெடுஞ்சாலை, ஊசிமலை, தொரப்பள்ளி இடையே சேதமடைந்த சாலைகளில் தற்காலிக சீரமைப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார் மைசூரு -ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிகளவில் வந்து செல்கின்றனர். இச்சாலையில், ஊசிமலை -தொரப்பள்ளி -இடையே உள்ள, 15 கி.மீ., சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது.

சேதமடைந்த பகுதிகள் அவ்வப்போது தற்காலிகமாக சீரமைத்தாலும், நிரந்தர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு பெய்த பருவமழையில் சாலை மேலும் சேதமடைந்தது. சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், சேதமடைந்த பகுதிகளை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறை, 5.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

தொடர்ந்து, தற்காலிக சீரமைப்பு பணிகளை ஊசிமலையில் நேற்று, துவங்கினர். இப்பணிகளை, தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார் ஆய்வு செய்தார்.

இதனை வரவேற்றுள்ள சுற்றுலா பயணிகள், 'சேதமடைந்த சாலை முழுமையாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'ஊசிமலை முதல் தொரப்பள்ளி வரையிலான, 13 கி.மீ., சாலையில், சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு சாலை, முழுமையாக சீரமைக்கப்படும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us