/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய ஜூனியர் சாம்பியன் கால்பந்து போட்டி; நீலகிரி மாணவர்கள் தகுதி
/
தேசிய ஜூனியர் சாம்பியன் கால்பந்து போட்டி; நீலகிரி மாணவர்கள் தகுதி
தேசிய ஜூனியர் சாம்பியன் கால்பந்து போட்டி; நீலகிரி மாணவர்கள் தகுதி
தேசிய ஜூனியர் சாம்பியன் கால்பந்து போட்டி; நீலகிரி மாணவர்கள் தகுதி
ADDED : ஜூலை 25, 2025 08:39 PM

கோத்தகிரி; நீலகிரி மாவட்ட மாணவர்கள், தேசிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
அகில இந்திய கால்பந்து சங்கம் நடத்தும், ஜூனியர் நேஷனல் சாம்பியன் டாக்டர் பிசி ராய் கோப்பைக்கான கால்பந்து போட்டி பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
இப்போட்டியில், கோத்தகிரியில், பிளஸ்-1 படிக்கும், பரலட்டி கிராமத்தை சேர்ந்த மவுமிஷ் மற்றும் அளியூர் கிராமத்தை சேர்ந்த மவுஷல், தமிழ்நாடு அணிக்காக விளையாடுகின்றனர்.
சகாயநாதன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு சங்க தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
நீலகிரி கால்பந்து சங்க செயலாளர் மோகன முரளி கூறுகையில்,'' நம் மாவட்டத்தை சேர்ந்த தர்ஷன் மற்றும் நந்தகோபால் ஆகியோர், அகில இந்திய கால்பந்து நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது, இரு மாணவர்கள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்,'' என்றார்.