/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகள் பிரச்னைக்கு தேசிய அளவில் போராட்டம்: ஒருங்கிணைப்பு குழு தலைவர் பேட்டி

ADDED : டிச 23, 2024 07:05 AM

ஊட்டி : 'தேயிலை விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக, தேசிய அளவில் போராட்டங்கள் நடத்தவும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் தயாராக உள்ளது,' என, சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்தார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன், ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தனியாரால் நடக்கும் வெளி மார்க்கெட்டில், கூட்டுறவு விலையை விட அதிக விலைக்கு கொள்முதல் செய்வதாக ஒரு போட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதை வைத்து, இங்குள்ள விளை நிலங்களை அபகரித்து விவசாயிகளை வெளியேற்றுவதற்கான சதி நடக்கிறது.
இந்த சதிக்கு, தமிழக அரசும் துணை போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. படுகர் இன மக்கள் மற்றும் ஆதிவாசி இன மக்களுக்கான உரிமைகள் சரியாக வழங்கப்பட வேண்டும்.
அரசு நிர்ணயம் செய்யும் விலையை கூட தேயிலை சிறு விவசாயிகள் பெற முடியாத சூழ்நிலை இருப்பது கண்டிக்கத்தக்கது.
தங்களுக்கு உரிய விலை கிடைக்க மலை மாவட்ட விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு முழு ஆதரவு அளிக்கும்.
பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார். இதில், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சைமோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.