sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

 தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : பிப் 28, 2026 05:39 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: 'மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளை வெளிக்கொண்டு வருவதன் மூலம், சிறந்த விஞ்ஞானிகளாக மாற முடியும்,' என, அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, பந்தலுார் அருகே உப்பட்டி எம்.எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் கவிதா வரவேற்றார்.

அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஆசிரியர் சங்கர் தலைமை வகித்து பேசியதாவது:

நாட்டில் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தவும், சி.வி.,ராமனின் 'ராமன் விளைவு' கண்டுபிடிப்பை கவுரவப்படுத்தும் வகையிலும், ஆண்டுதோறும் பிப், 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1928ல் இந்த நாளில் 'ராமன் விளைவு' கண்டுபிடிக்கப்பட்ட, நிகழ்விற்காக, 1930 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். மேலும், நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெயரும் பெற்றார். ஒளிச்சிதறல் குறித்து இவரின் கண்டுபிடிப்பு, மருத்துவம், அறிவியல் சார்ந்த படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயனாக உள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் அறிவியலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும், இளைய தலைமுறையினரை அறிவியல் சார்ந்த துறைகளில் ஊக்கப்படுத்தவும், அறிவியல் சார்ந்த சிந்தனைகளை வளர்க்கவும் இது போன்ற விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.

எனவே, மாணவர்கள் தங்களின் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளை, வெளிக்கொண்டரவும், அதன் மூலம் தங்களையும் சமூகத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக மாற்றிக் கொள்ளவும் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, 'டெலஸ்கோப்' வாயிலாக வானம் மற்றும் தொலைதூரத்தில் உள்ள பொருட்களையும், 'போலாராய்டு' மூலம் சூரியன் மற்றும் சூரிய கதிர்களையும் மாணவர்கள் பார்த்து வியப்படைந்தனர். முப்பட்டகம் மூலம் வானத்தின் நிறங்கள் மற்றும் ஒளிச்சிதறல்களை பார்த்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் ஆசிரியர் மணிவாசகம், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணகுமார், வானவில் மன்ற பொறுப்பாசிரியர் ஜெயஸ்ரீ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us