UPDATED : அக் 08, 2026 06:57 PM
ADDED : அக் 08, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் புளியாம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணிதிட்ட முகாம் துவங்கியது.
திட்ட அலுவலர் அர்ஜுணன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்து, ‘மாணவர்களிடையே தலைமை பண்புகளின் முக்கியத்துவம்,’ குறித்து விளக்கினர். கல்லுாரி முதல்வர் செல்வராஜ் முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் மாணவர்கள் சமூக சிந்தனை, அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்,’’ என்றார். ஆய்வக பயிற்றுனர் அருள்ராஜூ, பயிற்றுனர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் தீபா நன்றி கூறினார்.
