/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடசோலை பள்ளியில் தேசிய இளைஞர் நாள்
/
கடசோலை பள்ளியில் தேசிய இளைஞர் நாள்
ADDED : ஜன 15, 2024 10:45 PM
கோத்தகிரி;கோத்தகிரி கடசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் 'தேசிய இளைஞர் நாள்' நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்து, 'விவேகனந்தரின் ஆன்மிகம், நாட்டுப்பற்று, தேச விடுதலை , சிகாகோ மாநாட்டு உரை,' ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, பொங்கல் திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதில், 'பள்ளி மாணவர்களுக்கு கோல போட்டி, கயிறு இழுத்தல், ஓவியம், இசை நாற்காலி போட்டி,' என, பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் அருண்குமார், இல்லம் தேடி கல்வியின் ஒருங்கிணைப்பாளர் ஹேரி உத்தம் சிங் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பொங்கல் விழா சிறப்பு குறித்து பேசினர். பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் பரிசு வழங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகளுடன் இணைந்து, தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் செய்திருந்தார்.