ADDED : அக் 18, 2026 08:03 PM
பந்தலூர்: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், ஆண்டுதோறும் நவராத்திரி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு நவராத்திரி முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு தினசரி காலை, வகுப்புகளுக்கு செல்லும் முன்னர் மாணவர்கள் இணைந்து பூஜை செய்து, பிரார்த்தனை செய்து இறைவனை வழிபடுகின்றனர்.
நேற்று பள்ளி ஆசிரியர்கள் சார்பில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பள்ளி தாளாளர் மனோஜ் குமார் தலைமையில், முதல்வர் அன்பரசி தனராஜ், துணை முதல்வர் ரேணுகா தலைமையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஆசிரியர் மந்திரங்களை உச்சரித்து குமாரவேல் பூஜைகளை நடத்தினார்.
தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அம்மனுக்கு மலர் தூவி வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், இறை வழிபாடுகள் வாயிலாக கிடைக்கும் நன்மைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்கள். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்
