/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவன இருப்பில் 992 மெட்ரிக் டன் உரம்! விவசாயிகளின் தேவைக்கேற்ப தடையின்றி விற்பனை
/
என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவன இருப்பில் 992 மெட்ரிக் டன் உரம்! விவசாயிகளின் தேவைக்கேற்ப தடையின்றி விற்பனை
என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவன இருப்பில் 992 மெட்ரிக் டன் உரம்! விவசாயிகளின் தேவைக்கேற்ப தடையின்றி விற்பனை
என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவன இருப்பில் 992 மெட்ரிக் டன் உரம்! விவசாயிகளின் தேவைக்கேற்ப தடையின்றி விற்பனை
ADDED : ஆக 20, 2024 10:07 PM

ஊட்டி : நீலகிரியில், என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனத்தில் கலப்புரம் மற்றும் நேரடி உரங்கள், 992 மெட்ரிக் டன் கை இருப்பில் உள்ளதால், விவசாயிகளுக்கு தடையின்றி வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை விவசாயம், 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை, மலை காய்கறி விவசாயத்திற்கு உரத்தேவை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு கலப்புரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
உரத்தின் வகைகள்
இம்மாவட்டத்தில் தேயிலை, மலை காய்கறிகளான உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட சாகுபடிக்கு, 'கலப்புரம் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர், டோலமைட், வேப்பம் புண்ணாக்கு. அம்மோனியா பேஸ், அம்மோனியா சல்பேட்,' ஆகியவை எண்களின் அடிப்படையில், குறிப்பிட்ட காய்கறி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
தவிர, யூரியா, எம்.ஓ.பி., டி.ஏ.பி., எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட நேரடி உரங்கள் மாவட்டத்தில் உள்ள என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனம், கூட்டுறவு கடன் சங்கம் மற்றும், 300 தனியார் உரக்கடைகள் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த உரங்களை வேளாண் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே விற்க அனுமதிக்கின்றனர்.
தேவைக்கேற்ப கையிருப்பு
கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முத்துகுமார் கூறுகையில்,''நீலகிரியில் தேயிலை, மலை காய்கறி விவசாயத்திற்கு தேவையான உரங்கள் என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ளது.
இதில், '407 மெட்ரிக் டன் கலப்புரம் மற்றும் 585 மெட்ரிக் டன் நேரடி உரம்,' என, மொத்தம், 992 மெட்ரிக் டன் உரம் இன்று(நேற்று) நில வரப்படி, கையிருப்பில் உள்ளது.
கலப்புரத்தை விவசாயிகள் தேவைக்கேற்ப வாங்கலாம். நேரடி உரங்களை வாங்க விவசாயிகள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பித்து குறிப்பிட்ட அளவில் வாங்கலாம். தேவைப்படுபவர்கள், என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனத்தை அணுகலாம்,'' என்றார்.