/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை: வி.ஏ.ஒ.,க்கள் போராட்டம் வாபஸ்
/
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை: வி.ஏ.ஒ.,க்கள் போராட்டம் வாபஸ்
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை: வி.ஏ.ஒ.,க்கள் போராட்டம் வாபஸ்
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை: வி.ஏ.ஒ.,க்கள் போராட்டம் வாபஸ்
ADDED : பிப் 12, 2024 01:21 AM
கூடலுார்:கூடலுாரில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், வி.ஏ.ஓ.,கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கூடலுார் ஓவேலி பெரியசோலை பகுதியில், செரீப் என்பவர், செக்ஷன்-17 நிலத்தில் இருந்த பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியை மேற்கொண்டுள்ளார். வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து பணியை நிறுத்தும்படி கூறியதுடன், இது தொடர்பாக தாசில்தாரிடம் அறிக்கையும் வழங்கினர்.
இந்நிலையில்,'பணியை தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பித்தும் அதனை செயல்படுத்தவில்லை,' என, கூறி கூடலுார் தாசில்தார் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு விளக்கம் கேட்டு,' நோட்டீஸ் வழங்கினார்.
இந்நிலையில், அந்த நோட்டீசை நிபந்தனை இன்றி ரத்து செய்யவும்; தாசில்தாரை மாற்ற கோரியும், கூடலுார், பந்தலுார் வி.ஏ.ஓ.,கள், கூடலுார் தாசில்தார் அலுவலகம் முன்பு, 7ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக உதவியாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டம் மூன்று நாட்கள் நடந்தது.
தொடர்ந்து, கூடலுார் தாசில்தார் ராஜேஸ்வரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதில், 'நோட்டீசை' திரும்ப பெறுவதாக உறுதியளித்தார். அதனை ஏற்று மூன்று நாட்கள் நடந்த போராட்டத்தை வி.ஏ.ஓ.,க்கள் வாபஸ் பெற்றனர்.