/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் 'நெலிக்கோலு' அறக்கட்டளை கலந்தாய்வு கூட்டம்
/
ஊட்டியில் 'நெலிக்கோலு' அறக்கட்டளை கலந்தாய்வு கூட்டம்
ஊட்டியில் 'நெலிக்கோலு' அறக்கட்டளை கலந்தாய்வு கூட்டம்
ஊட்டியில் 'நெலிக்கோலு' அறக்கட்டளை கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஏப் 29, 2025 09:07 PM

ஊட்டி;
ஊட்டியில் நெலிக்கோலு அறக்கட்டளை சார்பில்,'பாதுகாக்கப்பட்ட நீலகிரி உயிர்க்கோள பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள நீர்மின் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சூழலியல் மற்றும் சமூக வாழ்வியல் சீர்கேடுகள்,' என்ற தலைப்பில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
அதில், சூழலியல் வல்லுனர்கள் அஜீஷ்,  ராமன் சிவக்குமார் ஆகியோர், சில்ஹல்லா நீர்மின் திட்டத்தினால், பாதுகாக்கப்பட்ட நீலகிரி உயிர்க்கோள பகுதியில் ஏற்பட உள்ள சீர்கேடுகள் குறித்து விளக்கினர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் வக்கீல் கிருஷ்ணன், பாதுகாக்கப்பட்ட நீலகிரி உயிர்க்கோள பகுதி அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை நடந்த நிகழ்வுகளை விவரித்தார்.
தொடர்ந்து, பலரும் தெரிவிக்கப்பட்ட பல்வேறு காரணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சட்ட நிவாரணம் உள்ளிட்ட அனைத்து மாற்று வழிமுறைகளை கையாளுவது; மேல் நடவடிக்கைக்காக, இயற்கை ஆர்வலர்கள், சட்ட ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைக்க முடிவெடுக்கப்பட்டது. அறக்கட்டளை மேலாண் இயக்குனர் தருமன் நன்றி கூறினர்.

