/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுகாதாரத்தில் அலட்சியம் காட்டும் நெல்லியாளம் நகராட்சி
/
சுகாதாரத்தில் அலட்சியம் காட்டும் நெல்லியாளம் நகராட்சி
சுகாதாரத்தில் அலட்சியம் காட்டும் நெல்லியாளம் நகராட்சி
சுகாதாரத்தில் அலட்சியம் காட்டும் நெல்லியாளம் நகராட்சி
ADDED : அக் 24, 2025 11:39 PM

பந்தலூர்: நெல்லியாளம் நகராட்சி சுகாதாரத்தில் அலட்சியம் காட்டி வருவது, மக்களையும், வியாபாரிகளையும் பாதிப்படைய செய்துள்ளது.
நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பந்தலூர், தேவாலா, நாடுகாணி, உப்பட்டி, அத்திக்குன்னா பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குப்பைகளை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பணிகளை சுகாதார ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்து சுகாதாரத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், குப்பைகளை முறையாக அகற்றாமல் விட்டுச் செல்கின்றனர்.
தாலுகா தலைநகரான பந்தலூர் பஜார் பகுதியில், குப்பைகள் மூட்டைகளாக கட்டப்பட்டு கடைவீதிகள், குடியிருப்புகள் முன்பாக கடந்த மூன்று நாட்களாக வைக்கப்பட்டு உள்ளது. நகராட்சி குப்பை லாரிகளில் குப்பைகள் ஏற்றப்பட்டு, நான்கு நாட்களாக புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறும், துர்நாற்றத்தால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வரும் பயணியர் பஸ் ஸ்டாண்டில், நிற்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ள, கழிவுகளை கால்நடைகள் உட்கொ ள்வதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுகாதாரத்தை மேம்படுத்தி மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், அலட்சியம் காட்டி வருவது நோய் பரவலை அதிகரிக்கச் செய்யும் என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

