/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 62 கற்போர் பங்கேற்பு
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 62 கற்போர் பங்கேற்பு
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 62 கற்போர் பங்கேற்பு
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 62 கற்போர் பங்கேற்பு
ADDED : ஜூன் 21, 2025 06:20 AM
கோத்தகிரி : கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப்பள்ளி மையங்களில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது.
மாநிலத்தில் சிறுவர்கள் முதல் கொண்டு, முதியோர் வரை அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, அரசு மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தேர்வு நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்ந்த, ஒர சோலை, அண்ணாநகர், பாரதிநகர் மற்றும் குண்டாடா பிரிவு ஆகிய மையங்களில், பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமையில் தேர்வு நடந்தது. இதில், 62 கற்போர் பங்கேற்றனர். தேர்வை, ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில், ஆசிரியர்கள் ராமலிங்கம், கமலா, தன்னார்வலர்கள் தேன்மொழி, பத்மாவதி, சுசீலா மற்றும் பிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர்.