/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய படகு
/
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய படகு
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய படகு
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய படகு
ADDED : ஜன 20, 2024 02:15 AM

ஊட்டி;ஊட்டி படகு இல்லத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 12 புதிய படகுகள் வாங்கப்பட்டுள்ளது.
ஊட்டி படகு இல்லத்தில், ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் பேர் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய, 31 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 61 மிதி படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
தவிர, சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக படகு இல்லத்தில் தனியார் மூலம் மினி ரயில் மற்றும் பிற விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும், சிறுவர் பூங்கா உட்பட வசதிகள் உள்ளன. படகு சவாரி முடிந்து வெளியே வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி சென்று மகிழ்கின்றனர்.
இந்நிலையில், நுாற்றுக்கு மேற்பட்ட மிதி படகு கள் இருந்த நிலையில் பெரும்பாலான மிதி படகுகள் சேதம் அடைந்ததால், புதிதாக படகுகள் வாங்க சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவு செய்தது.
படகு இல்ல மேலாளர் சாம்சன் கூறுகையில்,''நடப்பாண்டு சீசனை ஒட்டி, ஊட்டி ஏரியில், புதியதாக, 45 படகுகள் வாங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதற்கட்டமாக, 12 படகுகள் வாங்கப்பட்டது. இந்த புதிய படகுகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன,'' என்றார்.