/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.35 கோடியில் சூழல் மையம் அமைக்கும் திட்டத்தில் புதிய சர்ச்சை! அரசு பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு ஆட்சேபம்
/
ரூ.35 கோடியில் சூழல் மையம் அமைக்கும் திட்டத்தில் புதிய சர்ச்சை! அரசு பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு ஆட்சேபம்
ரூ.35 கோடியில் சூழல் மையம் அமைக்கும் திட்டத்தில் புதிய சர்ச்சை! அரசு பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு ஆட்சேபம்
ரூ.35 கோடியில் சூழல் மையம் அமைக்கும் திட்டத்தில் புதிய சர்ச்சை! அரசு பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு ஆட்சேபம்
ADDED : அக் 15, 2025 07:27 AM

கூடலுார்: 'முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், 35 கோடி ரூபாயில் நவீன யானையை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மையம் அமைக்கும் பணியை தனியாருக்கு வழங்க கூடாது,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமும் யானைகள் வளர்ப்பதில் குறிப்பாக, தாயை பிரிந்த மற்றும் தாயை இழந்த குட்டி யானைகளை பராமரித்து வளர்ப்பதில் சிறந்து விளங்குகிறது. குட்டி யானை அதன் பாகன்கள் இடையேயான பாச பிணைப்பினை மையமாக வைதத்து எடுக்கப்பட்ட, 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்துக்கு, சிறந்த ஆவண படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, முதல்வர் ஆகியோர் முதுமலைக்கு நேரில் வந்து, ஆவண படத்தில் இடம்பெற்ற குட்டியானைகள் ரகு, பொம்மியை பார்த்ததுடன், அதன் பாகன் தம்பதியை சந்தித்து பாராட்டி சென்றனர்.
ரூ. 35 கோடி நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், தெப்பக்காடு யானைகள் முகாமில் நவீன யானைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மையம் அமைக்க, 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான பணிகளை, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
வனஉரியின ஆர்வலர்கள் கூறுகையில்,'தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.டி.சி.எ.,) வழிகாட்டுதல்படி, பாதுகாக்கப்பட்ட பகுதியில் தனியார் நிறுவனம் பணிகள் செய்யக்கூடாது. ஆனால், தமிழ்நாடு வனத்துறை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் தனியார் நிறுவனத்திற்கு பணிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பழமையான தொப்பக்காடு யானைகள் முகாம், நம் நாட்டின் அடையாளமாக உள்ளது. எனவே, யானைகள முகாமில் தற்போது உள்ள சுற்றுச்சூழலை மாற்றாமல், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். மேலும், இங்குள்ள மருத்துவமனையை நவீன முறையில் மேம்படுத்தி, கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க வேண்டும்,' என்றனர்.
முதுமலை கள இயக்குனர் கிருபாசங்கர் கூறுகையில், ''தெப்பக்காடு, யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலாவை மேம்படுத்தவும், யானைகளுக்கான பாதுகாப்பு மையம் அமைக்கவும், 35 கோடி ரூபாய் நிதியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இறுதி செய்யப்படவில்லை. அரசு பணிகள் தனியாருக்கு வழங்கப்படமாட்டாது. பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் முறையான அனுமதி பெற்று பணிகள் துவங்கப்படும்,''என்றார்.