/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
/
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
ADDED : டிச 23, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் நுாலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பழமையான கட்டடம், இந்நிலையில், கடந்த, 2022 ஆக., மாதம் பெய்த பலத்த மழையின் போது, இடிந்து விழுந்து சேதமடைந்தது.
அதனுள், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் சிக்கியது. நகராட்சி ஊழியர்கள் உதவியுடன், 90 ஆயிரம் புத்தகங்கள் மீட்கப்பட்டு, தனியார் கட்டடத்தில் வைக்கப்பட்டு, அங்கு நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டடம் இடிந்த பகுதியில், புதிய கட்டடம் கட்டுவதற்கு, 1.25 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

