போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுலா வழிகாட்டி மாநில எல்லையில் வைக்கப்படும் புதிய 'க்யூ.ஆர்' கோடு
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுலா வழிகாட்டி மாநில எல்லையில் வைக்கப்படும் புதிய 'க்யூ.ஆர்' கோடு
ADDED : மே 20, 2026 01:16 AM

ஊட்டி: ஊட்டியில் கோடை சீசனின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக போலீசார் சார்பில் சுற்றுலா வழிகாட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் குறித்து, சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே அறிந்து கொண்டு வாகனங்களை இயக்கக்கும் விதமாக, நீலகிரி மாவட்ட காவல்துறை; தனியார் அமைப்பு சார்பில் நவீன வலைதள சுற்றுலா வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட எஸ்.பி., நிஷா அறிமுகம் செய்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டியில், 'ஸ்மார்ட் டூரிஸ்ட்' என்ற பெயரில், புதிய 'க்யூ.ஆர்'கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகன நிறுத்தங்களில் இடம் உள்ளதா; போக்குவரத்து நெரிசல் குறித்து முன்கூட்டியே'ஆன்லைனில்' தெரிந்து கொள்ளலாம். மேலும், நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் சுற்றுலா பயணிகள் எந்த வழித்தடத்தில் சென்றால் எளிதாக சுற்றுலாத்தலங்களை பார்க்கலாம் என்பது குறித்தும் அறிய முடியும். மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் இந்த செயலி குறித்து 'பிளக்ஸ்' போர்டுகள் வைக்கப்படும். இதனால், பயணிகளுக்கு பெரும் பயன் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் எஸ்.பி.,மணிகண்டன், ஊட்டி நகர டி.எஸ்.பி., கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
