/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
/
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : டிச 23, 2025 07:05 AM

கூடலுார்: கூடலுார் புளியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளியில், ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட, 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை, மாநில முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
கூடலுார் புளியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளியில், 2.66 கோடி ரூபாய் நிதியில், 10 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார். விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன் தலைமை வழித்தார். புதிய பள்ளி கட்டடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, அதிகாரிகள் குத்துவிளக்கு ஏற்றி பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டனர். விழாவில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சின்னமாது உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் வனஜா நன்றி கூறினார்.