/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேவாலயங்களில் புத்தாண்டு பிரார்த்தனை
/
தேவாலயங்களில் புத்தாண்டு பிரார்த்தனை
ADDED : ஜன 02, 2026 06:14 AM
குன்னுார்: குன்னுாரில் புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் பிரார்த்தனை நடந்தது.
பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணியளவில், உதவி பங்கு தந்தை கிளமெண்ட் ஆன்டனி தலைமையில் திருப்பலி, இளையோர்களின் ஆராதனை, கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.
நேற்று 7:00 மணிக்கு பங்கு தந்தை அருட்சகோதரர் ஆரோக்கியராஜ், காலை 9:00 மணிக்கு பாதிரியார் போஸ்கோ தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பங்கேற்றனர். குன்னூர் அந்தோணியார் தேவாலயம், ஆழ்வார்பேட்டை ஜோசப் தேவாலயம், மார்த்தோமா தேவாலயம், வெலிங்டன் பேரக்ஸ் புனித ஜார்ஜ் காரிசன் தேவாலயம், உட்பட தேவாலயங்களில் காலை நேரத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

