தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/செய்தி கதம்பம்... நீலகிரி மாவட்டம்

செய்தி கதம்பம்... நீலகிரி மாவட்டம்

செய்தி கதம்பம்... நீலகிரி மாவட்டம்


UPDATED : அக் 11, 2026 03:45 PM

ADDED : அக் 11, 2026 01:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 03:45 PM ADDED : அக் 11, 2026 01:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தடகள விளையாட்டு போட்டி:எம்.ஆர்.சி., பள்ளி சாம்பியன்

குன்னுார் அருகே, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் முதல் முறையாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடையிலான தடகள விளையாட்டு போட்டிகள் தங்கராஜ் செயற்கை இழை மைதானத்தில் நடந்தன.

மாவட்டம் முழுவதிலுமிருந்து, 18 பள்ளிகளை சேர்ந்த, 355 மாணவ, மாணவிகள் இபோட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், 100 மீட்டர், 200 மீட்டர். 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக, தடகள போட்டிகளை கர்னல் பிரதீப் துவக்கி வைத்தார்.

கண்டோன்மென்ட் போர்டு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது. தூய அன்னாள் கான்வென்ட் பள்ளி இரண்டாம் இடத்தையும், குன்னூர் தூய அந்தோணியார் பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. பிரிகேடியர் கமாண்டன்ட் கிருஷ்ணேந்து தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிகளுக்கும், பரிசுகள், கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

கிராமங்களில் துாய்மை பணி

கூடலூர் அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளியில், என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார்.

முகாமில், கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி, புதர்களை வெட்டி அகற்றினர். தேவாலா -மூச்சுக்குன்னு சாலையை சீரமைத்தனர். பழங்குடியின கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முகாமில் பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், என்.எஸ். எஸ். திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் மகேஸ்வரன், மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்தனர்.

இடி மின்னலுடன் மழை

மரம் விழுந்து வீடு சேதம்

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் இடி, மின்னலுடன், கனமழை பெய்து வருகிறது. கோத்தகிரி பகுதியில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோத்தகிரி பாண்டியன் பார்க் அருகில் அமைந்துள்ள கால்ப் லிங்க்ஸ் பகுதியில், வானுயர்ந்த கற்பூர மரம் விழுந்தது.

இதில், சாலையோரத்தில் கட்டிக் கொண்டிருந்த வீடு சேதம் அடைந்தது. அருகில் இருந்த ரேஷன் கடை மீது, மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தது. குறிப்பிட்ட நேரத்தில், ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த, கோத்தகிரி தீயணைப்பு துறை ஊழியர்கள், பவர் ஷா உதவியுடன் மரத்தை அறுத்து பொக்லைன் உதவியுடன் மரத்தை அகற்றினர்.

கல்வி மட்டுமே எதிர்காலம்

மாணவர்களுக்கு அறிவுரை

பந்தலூர் அருகே, தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்து வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன், காவலர்கள் குடியிருப்பு சாலை ஆகியவற்றை மாணவர்கள் சீரமைத்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார். திட்ட அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். எஸ்.ஐ., வர்கீஸ் பேசுகையில், ''மாணவர்கள் படிப்புடன் சமுதாயத்திற்கு சேவையாற்றும் சூழலை உருவாக்கும் நிலையில், படிப்பு ஒன்றே எதிர்காலத்தை வளமானதாக மாற்றும் என்பதை மனதில் வைத்து படிக்க வேண்டும்.'' என்றார். பி.டி.ஏ. தலைவர் தியாகராஜ், தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், கண்ணதாசன், திட்ட அலுவலர் பொற்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மருத்துவ பரிசோதனை முகாம்

இலவச கண்ணாடி வழங்கல்

குன்னூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலை பள்ளியில், நீலகிரி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

முகாமை மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் கோபால் துவக்கி வைத்தார். செயலாளர் மோரிஸ் சாந்தா குரூஸ், ஜூனியர் செஞ்சிலுவை சங்கத்தை தொடங்கி வைத்தார்.

டாக்டர் ஜேன் மார்ட்டினெஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். கண் பரிசோதனையில், 74 பேருக்கு ரோட்டரி நீலகிரி சங்க ஒருங்கிணைப்பாளர் ஹேமா இலவச வாசிப்பு கண்ணாடிகளை வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் செய்திருந்தார்

நிர்வாக குழு உறுப்பினர் பிரின்ஸ், ஜே.ஆர்.சி ஆலோசகர் ஜோசபின், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். கெந்தளா கிராமத்தில் நடந்த முகாமில், 102 பேர் பரிசோதனை மேற்கொண்டனர். 61 இருக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us