ADDED : மே 26, 2013 08:30 PM
குன்னூர்:
குன்னூர் பழக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட, மலை மாவட்டத்தின் அரிய வகை பழங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த்து.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 55வது பழக்காட்சி கடந்த இரு நாட்கள் நடந்தது.
இந்த பழக்காட்சியில் தோட்டக்கலை துறை மற்றும் தனியார் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
குன்னூரை சேர்ந்த கோபி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர், நீலகிரியில் விளையும் அரிய வகை பழங்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதில், 4 அடி உயரம் மட்டுமே வளரும் மலை வாழை, காட்டு வேடன், வெள்ளரி, பன்னீர் கொய்யா, கலா, நகா, புணுகு, அத்தி, குரங்கு பழம், ஆசீர்வாத் ஊசி, தவுட்டு, விழாத்தி பழம், விக்கி பழம், பஞ்ச பாண்டவர், ஆப்பிள் நெல்லி ஆகிய பழங்கள் சுவையாக மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டவை. சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, வயிற்று <உபாதைகளுக்கு இந்த பழங்கள் நிவாரணியாக விளங்கி வருகின்றன.
மேலும், 2 கிலோ எடையளவு கொண்ட கொய்யா மாதுளை, விதையில்லா திராட்சை ஆகிய பழங்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.