sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பயிற்சி முகாமில் "பிளாஸ்டிக்' தாராளம்

/

பயிற்சி முகாமில் "பிளாஸ்டிக்' தாராளம்

பயிற்சி முகாமில் "பிளாஸ்டிக்' தாராளம்

பயிற்சி முகாமில் "பிளாஸ்டிக்' தாராளம்


ADDED : ஆக 03, 2011 01:08 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், விவசாயிகளுக்கு முட்டைகோஸ் பயிர் பாதுகாப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தோட்டக்கலை வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமுக்கு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் துரைராஜ் தலைமை வகித்தனர். முட்டைகோஸ் எந்த பருவத்தில் பயிர் செய்வது; மண்ணின் தன்மையை அறிந்து உரமிடுவது; இயற்கை வேளாண்மை பெருக்குவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜேந்திரன், தோட்டக்கலை ஆராய்ச்சிமைய தலைவர் செல்வராஜ் ஆகியோர் விளக்கமளித்தனர். விழாவில் தோட்டக் கலைதுறை உதவி இயக்குனர்கள் ஜெகதீஸ்குமார், பிரகாசம், வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக் பேக்' தாரா ளம்: நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிக்கடி மார்க்கெட்டில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரெய்டு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் அரசு துறைகள் நடத்தும் விழாக்களில் பிளாஸ்டிக் புழக்கம் தாராளமாக உள்ளது. நேற்று நடந்த பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்பட்டது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தும் மாவட்ட நிர்வாகம், அரசு துறைகள் நடத்தும் விழாக்களில் பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுதுவதில்லை. ஒருவேளை அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தோட்ட கலைத்துறை அதிகாரிகள் தான் பதிலளிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us